Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யானைகளுக்கெதிராக தொடரும் அராஜகம் – மற்றுமொரு யானை கொலை

In இலங்கை
Updated: 03:30 GMT, Dec 13, 2017 | Published: 03:30 GMT, Dec 13, 2017 |
0 Comments
1342
This post was written by : Varshini

அநுராதபுரம் – தெமடேகம பகுதியில் காட்டு யானையொன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கண்டெடுக்கப்பட்ட குறித்த யானையின் உடலில் பல துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுவதாக, வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை திறப்பன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யானைகளை சுட்டுக்கொல்லும் நடவடிக்கைகள் அண்மைய காலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தலபூட்டுவா எனும் அரிய வகை கொம்பன் யானையொன்று அண்மையில் கொலைசெய்யப்பட்டு அதன் முத்துக்களை எடுத்துச் சென்ற ஐவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் புத்தளம் பகுதியிலும் யானையொன்று சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg