Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு ஜெருசலேமில் துருக்கியத் தூதரகம்!

In
Updated: 05:42 GMT, Dec 18, 2017 | Published: 05:42 GMT, Dec 18, 2017 |
0 Comments
1270
This post was written by : Suganthini

கிழக்கு ஜெருசலேம் நகரில் துருக்கியின் தூதரகத்தை திறக்கவுள்ளதாக, துருக்கிய ஜனாதிபதி தையிப் ஏர்டோகன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவித்தமையைக் கண்டித்து துருக்கியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதனையடுத்து, அவர் கருத்துத் தெரிவித்தபோதே, இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘தற்போது ஜெருசலேம் விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளதால், எம்மால் அங்கு செல்லமுடியாது. ஆனால், ஜெருசலேமில் எமது தூதரகத்தைத் திறக்க முடியும். ஆகையால், கடவுளின் விருப்பத்துடன், ஜெருசலேமில் எமது தூதரகத்தைத் திறக்கும் நாள் நெருங்கியுள்ளதாகவும் நான் எண்ணுகின்றேன்’ என்றார்.

இஸ்ரேலும் பலஸ்தீனமும் தமது நாடுகளின் தலைநகரமென்று கூறிவரும் நிலையில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை ஒருதலைப்பட்சமாக அங்கீகரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அதற்கான அறிவிப்பை இம்மாதம் 6ஆம் திகதி வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் தீர்மானத்துக்கு எதிராக   பல்வேறு நாடுகளிலிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளன. இந்நிலையிலேயே, துருக்கிய ஜனாதிபதியின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg