Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களுக்கு நல்லதையே செய்கிறோம்: மகிழ்ச்சியில் தமிழிசை!

In இந்தியா
Published: 08:25 GMT, Dec 18, 2017 |
0 Comments
1123
This post was written by : Kemasiya
sdfwdf

“நாங்கள் மக்களுக்கு அனைத்து நலன்களையும் செய்து கொண்டிருக்கிறோம். அதனால் தான் மக்கள் நமக்கு அடுத்தடுத்து வாய்ப்புக்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்” எனத் தமிழிசை தெரிவித்துள்ளார்.

குஜராத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்று இடம்பெற்ற நிலையில், பா.ஜ.க.முதலிடத்தில் உள்ளது. இதை முன்னிட்டு தமிழகத்தின் பா.ஜ.க.தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் தெரிவித்த அவர்,

“குஜராத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவது மகிழ்ச்சி. கருப்புப் பண ஒழிப்பிற்குப் பின்னர் பா.ஜ.க. அதிக வெற்றிகளைச் சந்தித்து வருகிறது. எனவே எதிர்க்கட்சிகளின் தேவையற்ற கருத்துக்களை எல்லாம் மக்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதே உண்மை.

குஜராத்தில் மக்களின் ஆதரவு தொடர்ந்தும் பா.ஜ.க பக்கமே உள்ளது. காங்கிரஸ் கட்சியினர் வாக்கு எண்ணும் இயந்திரத்தில் பிழை உள்ளது எனத் தெரிவித்தார்கள். அவர்களுக்கு வெற்றி கிடைத்தால் இயந்திரம் சீராக செயற்படும். தோல்வி என்றால் இயந்திரத்தில் பிழை என கருதும் காங்கிரஸின் எண்ணம் பிழையானது.

மக்களின் தீர்ப்பை சரியாக ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள். மக்கள் தெளிவாகவுள்ளனர்” எனத் தமிழிசை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg