Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னியின் மேன்முறையீடு நிராகரிப்பு

In
Published: 04:46 GMT, Dec 31, 2017 |
0 Comments
1102
This post was written by : Suganthini

ரஷ்யாவில் எதிர்வரும் வருடம் மார்ச் 18ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி செய்த மேன்முறையீட்டை, அந்நாட்டு உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ரஷ்யாவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை, எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கடந்த வாரம் தாக்கல் செய்தபோது, அதனை அந்நாட்டுத் தேர்தல்கள் ஆணையகம் நிராகரித்தது.

தேர்தல்கள் ஆணையகத்தின் இந்தத் தடைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நவால்னி மேன்முறையீடு செய்திருந்தார். இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டபோதே, இந்த மேன்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி மீதான ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழந்துள்ளதாக, ரஷ்யாவின் மத்திய தேர்தல்கள் ஆணையகம் கூறியுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், அந்நாட்டில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில்,   மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள புட்டினுக்கு பாரிய சவாலாக 41 வயதான நவால்னி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg