Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராணுவ ஆலோசகரின் பதவிக்காலம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு!

In இந்தியா
Updated: 06:24 GMT, Jan 1, 2018 | Published: 04:37 GMT, Jan 1, 2018 |
0 Comments
1121
This post was written by : Ravivarman

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் இராணுவ ஆலோசகர் அனில் கோஸ்லாவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு மாதம் நீடிக்குமாறு மத்திய அரசு இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நிதித்துறை, இராணுவம், அரசியல் உட்பட பல்வேறு துறையை சேர்ந்த வல்லுநர்கள் ஆலோசகர்களாக பணியாற்றி வருகின்றனர்.

ஜனாதிபதியின் இராணுவ ஆலோசகராக அனில் கோஸ்லா செயல்பட்டு வந்த நிலையில் அவரது பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், அவரது பதவிக்காலத்தை மேலும் ஒரு மாத காலம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி வரை அனில் கோஸ்லா இராணுவ ஆலோசகர் பதவியில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg