Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சின்மயாமிஷன், நல்லை ஆதீன குருமுதல்வர்களிடம் ஆசிபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையினர்!

In இலங்கை
Updated: 14:43 GMT, Jan 1, 2018 | Published: 14:39 GMT, Jan 1, 2018 |
0 Comments
1153
This post was written by : Surenth
SAM_8854

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் சின்மயாமிஷன் பிரம்மச்சாரிய யாக்கிரத சைதண்யா சுவாமிகள் மற்றும் யாழ் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரம்மச்சாரிய சுவாமிகள் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர்.

தமிழ்த் தேசிய பேரவையினர் சார்பில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று (திங்கட்கிழமை) இவ்வாறு ஆசிபெற்றுள்ளனர்.

யாழ். சின்மயாமிஷன் சுவாமிகள் ஆச்சிரமத்தில் நடைபெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளர் வி.மணிவண்ணன் தலமையிலான குழுவினர் சுவாமிகளைச் சந்தித்தனர்.

இதன்போது, அவர்களுடன் கலந்துரையாடிய சுவாமிகள் அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார். இதனையடுத்து நல்லை ஆதீன குருமுதல்வரைச் சந்தித்து ஆதீனக் குருமுதல்வரிடமும் ஆசீர்வாதம் பெற்றனர்.

இதனையடுத்து, நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட தமிழ்த் தேசியப் பேரவையினர் நல்லுர் தேரடியில் தவத்திரு யோகர் சுவாமிகளின் தியானத்தில் ஈடுபட்ட இடத்திலும் வழிபாட்டில் இடுபட்டனர்.

இதேவேளை, நேற்றையதினம் தமிழ்த் தேசியப் பேரவையினர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் ஆடிகளார் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SAM_8831 SAM_8833 SAM_8834 SAM_8838 SAM_8845 SAM_8851 SAM_8852

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg