Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மும்பை இந்தியன் அணியில் ரோஹித் ஷர்மா, பாண்டியா சகோதரர்கள் நீடிப்பர்?

In கிாிக்கட்
Updated: 04:40 GMT, Jan 2, 2018 | Published: 04:38 GMT, Jan 2, 2018 |
0 Comments
1346
This post was written by : Elakkiya
201801020902565547_1_fi64hmg3._L_styvpf

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்திய வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் பாண்டியா சகோதரர்களை தக்க வைத்துக் கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.

11 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரை முன்னிட்டு எதிர்வரும் 27 ஆம் திகதி வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளது. அதன்படி தொடரில் பங்கேற்றும் ஒவ்வொரு அணியும் ஐந்து வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று வீரர்களை நேரடியாகவும் ஏனைய இரு வீரர்களை ஏலத்தின் ஊடாகவும் தக்கவைத்துக் கொள்ளமுடியும். அவ்வாறு தமது அணியில் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்கள் விபரங்களை எதிர்வரும் 4 ஆம் திகதிக்குள் அணி நிர்வாகம் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் மூன்று சம்பியன் கிண்ணங்களை வென்று கொடுத்த அணித்தலைவர் ரோஹித் ஷர்மா மற்றும் துடுப்பாட்டத்தில் அசத்தும் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது சகோதரர் குணால் பாண்டியா ஆகியோரை தக்க வைத்துக் கொள்வதற்கு அணி நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

அதேவேளை சகலதுறை ஆட்டவீரர் கிரான் பொலார்ட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா ஆகியோரை ஏலம் மூலம் அணியில் தக்கவைத்துக் கொள்ளவும் அணி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இவ்வாறிருக்க டெல்லி அணியில் விக்கெட் காப்பாளர் ரிஷாப் பான்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும், ராஜஸ்தான் ரோயல் அணியில் ஸ்டீவ் ஸ்மித்தும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜாவும் அணி நிர்வாகங்களால் தக்கவைத்துக் கொள்ளப்படுவர் என்று எதிர்பார்ப்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg