Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டு. மாவட்டச் செயலகத்தில் புதுவருட சத்தியப்பிரமாணம்

In இலங்கை
Updated: 08:46 GMT, Jan 2, 2018 | Published: 08:46 GMT, Jan 2, 2018 |
0 Comments
1145
This post was written by : Varothayan

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதிய வருட வரவேற்பும் சத்தியப்பிரமாணமும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றன.

காலை 8.45 மணியளவில் மாவட்ட செயலக சித்தி விநாயகர் ஆலயத்தில் பூஜைகள் நடைபெற்று நிகழ்வு ஆரம்பமானது.

இதன்போது, தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, தமிழ் மொழி வாழ்த்து இசைக்கப்பட்டு, நாட்டுக்காக உயிர் நீத்த போர் வீரர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து அரசாங்க உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

சத்தியப்பிரமாணத்தினை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் புது வருட உரையாற்றினார்.

இதன்போது உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, திணைக்களத் தலைவர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

20180102_092013 DSC_9937 DSC_9939

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg