Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனித்துவத்தை ஒருபோதும் இழக்கமாட்டேன்: சி.வி.

In இலங்கை
Updated: 10:29 GMT, Jan 3, 2018 | Published: 10:19 GMT, Jan 3, 2018 |
0 Comments
1263
This post was written by : Risha

எமது தனித்துவத்தைப் பேணிக் கொண்டு தான் நான் தெற்குடன் உறவாடி வருகின்றேன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மக்களின் வாராந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்துள்ள சி.வி., ”இன்று நாம் தெற்கின் தயவிலேயே வாழ்கின்றோம். பல்லைக்காட்டி பயன் பெறுவதென்றால் எந்தத் தமிழ்த் தலைவரிலும் பார்க்க, கூடிய சலுகைகளை தெற்கில் இருந்து பெற இந்த விக்னேஸ்வரனால் முடியும். ஆனால், கூனிக் குறுகி அவர்களிடம் யாசகம் பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை.

எமது தனித்துவத்தைப் பேணிக் கொண்டு தான் நான் தெற்குடன் உறவாடி வருகின்றேன். பல தெற்கத்தேய அமைச்சர்களுடன் கூடி பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றேன். என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் எனக்குச் சமமானவர்களே. எனக்கு மேலானவர்கள் அல்ல. பிரபாகரன் பிறந்த மண்ணில் இவ்வாறு யாசகம் பெற எத்தனிப்போர் வாழ்ந்து வருவது விந்தையாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg