Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டணி உடைந்திருக்காவிடில் பிரபாகரன் இருந்திருப்பார்: ஆனந்தசங்கரி

In இலங்கை
Updated: 09:27 GMT, Jan 4, 2018 | Published: 02:43 GMT, Jan 4, 2018 |
0 Comments
1317
This post was written by : Elakkiya

தமிழர்களின் பேரழிவுகளுக்கு மூன்று சுயநலவாதிகளே காரணம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையிலான தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று (புதன்கிழமை) நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, “தமிழர் விடுதலைக் கூட்டணியை சிலரின் சுயநலத்துக்காக உடைத்திருக்காவிடில் பிரபாகரன் என்னும்  இலட்சிப் போராளி இன்றும் இருந்திருப்பார். அதுமட்டுமல்ல 2004 ஆம் ஆண்டே போர் நிறைவடைந்திருக்கும். பல லட்சம் மக்களும் பல ஆயிரக்கணக்கான போராளிகளும் உயிருடன் இருந்திருப்பர். இவையாவற்றுக்கும் மூன்று சுயநலவாதிகளே பிரதான காரணகர்த்தா” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது பேசப்படும் சமஷ்டி தொடர்பான விடயங்கள் கடந்த 2005 ஆம் ஆண்டே கொடுக்கப்பட்டதாகவும் அதனை கண்டுகொள்ளாதமைக்கும் தமிழ் மக்களை வழிநடத்திய தீயவர்களே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg