Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்ப்பாட்டத்தின் போதான உயிரிழப்புகளை ஏற்க முடியாது: ஐரோப்பிய ஒன்றியம்

In உலகம்
Published: 07:57 GMT, Jan 4, 2018 |
0 Comments
1165
This post was written by : Risha

ஈரானில் அதிகரித்துவரும் வன்முறைகளை ஐரோப்பிய ஒன்றியம் கூர்ந்து கவனித்துவருகின்ற நிலையில், இதன்போதான உயிரிழப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பிரஸ்சல்ஸில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக மாநாடொன்றின் போது ஒன்றியத்தின் பேச்சாளர் மினா அன்றீவா இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஈரானுடனான எமது உறவில் மனித உரிமை என்பது மிக முக்கிய பிரச்சினையாக விளங்கி வருகிறது. அமைதியான முறையிலான ஆர்ப்பாட்டம் மற்றும் கருத்து சுதந்திரம் என்பன அனைத்து நாடுகளுக்கும் உள்ள அடிப்படை உரிமைகளாகும். அதில் ஈரான் மாத்திரம் விதிவிலக்கல்ல.

இந்நிலையில் ஈரானில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் தொடர்பாகவும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலான மனித உயிர்களின் இழப்புகள் தொடர்பாகவும் ஐரோப்பிய ஒன்றியம் கூர்ந்து கவனித்து வருகிறது” என்றார்.

ஈரானில் நிலவும் ஊழல் நிறைந்த ஆட்சி மற்றும் ஸ்திரமற்ற பொருளாதார நிலைமையைக் கண்டித்து ஈரானில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களினால் அங்கு கடந்த ஆறு நாட்களாக நிலவிவரும் அமைதியின்மை காரணமாக, இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, அண்மைக் காலமாக ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 450இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் சிலர் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என நீதித்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg