Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்பிற்கு எச்சரித்தமை குறித்த குற்றச்சாட்டு அபத்தமானது: டொனி பிளேயர்

In
Updated: 10:23 GMT, Jan 4, 2018 | Published: 10:23 GMT, Jan 4, 2018 |
0 Comments
1786
This post was written by : Risha
tony-blair

2016 அமெரிக்க தேர்தலில் பிரித்தானியர்கள் கண்காணிப்பில் இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப்பின் உதவியாளர்களுக்கு எச்சரிக்கை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதை முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் மறுத்துள்ளார்.

அமெரிக்க எழுத்தாளர் மைக்கல் வொல்ஃபினால் வெளியிடப்பட்டுள்ள புத்தகத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விடயத்திற்கு மறுப்பு தெரிவித்து நேற்று (புதன்கிழமை) டொனி பிளேயரின் பேச்சாளர் தெரிவிக்கையில், இந்த குற்றச்சாட்டுகளானது நிச்சயமாக அபத்தமானவை.

இது முழுமையான கற்பனை உரையாகும். இந்த போலிக் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

டொனி பிளேயர் ட்ரம்பின் மருமகளான ஜாரெட் குஷ்னரை பலமுறை சந்தித்துள்ளதாக முந்தைய அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேவேளை, ட்ரம்பின் தொலைபேசி அழைப்புகள், தொலைத்தொடர்புகள் உள்ளிட்ட தேர்தல் பிரசாரங்களை பிரித்தானியா கண்காணித்து வருவதாக டொனி பிளேயர் ட்ரம்ப்பின் உதவியாளர்களுக்கு எச்சரித்திருந்ததாக தற்போது எழுத்தாளர் மைக்கல் வொல்ஃப் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg