Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவை சாடி ஈரான் ஐ.நா.விற்கு கடிதம்

In உலகம்
Updated: 12:49 GMT, Jan 4, 2018 | Published: 12:49 GMT, Jan 4, 2018 |
0 Comments
1151
This post was written by : Risha

ஈரானின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தேவையற்று தலையீடு செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

ஈரானினால், ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதமொன்றிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க தலைமையானது, பல அபத்தமான டுவிட் பதிவுகளின் மூலம் ஈரானியர்களை சர்வதேச சட்டத்தை மீறும் செயல்களில் ஈடுபட தூண்டியுள்ளதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஈரானில் நிலவும் ஊழல் நிறைந்த ஆட்சி மற்றும் ஸ்திரமற்ற பொருளாதார நிலைமையைக் கண்டித்து ஈரானில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களினால் அங்கு கடந்த ஆறு நாட்களாக நிலவிவரும் அமைதியின்மை காரணமாக, இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, அண்மைக் காலமாக ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 450இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் சிலர் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என நீதித்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg