Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைச்சுக்களின் செயலாளர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள்!

In இலங்கை
Updated: 03:31 GMT, Jan 6, 2018 | Published: 02:57 GMT, Jan 6, 2018 |
0 Comments
1120
This post was written by : Risha
President-Maithripala-Sirisena-Writes-to-Mahinda-Rajapaksa-Prime-Minister-should-be-handed-over-to-a-senior-member-of-the-Sri-Lanka-Freedom-Party-who-has-not-yet-been-granted-this-opportunity.

தேர்தல் நடவடிக்கைள் காரணமாக அரச நிறுவனங்களின் நாளாந்த மக்கள் சேவைகள் எந்தவகையிலும் பாதிக்கப்படக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சுக்களின் செயலாளர்களுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த ஜனாதிபதி, ”பொதுமக்களுக்கான சேவையை வினைத்திறனுடன் மேற்கொள்ள அமைச்சுக்களின் செயலாளர்கள் உதவ வேண்டும்.

எந்தவொரு அரச நிறுவனத்திடமும் உள்ள சொத்துக்கள் அல்லது வாகனங்களை தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்த இடமளிக்காதிருப்பது அமைச்சுக்களின் செயலாளர்களினது பொறுப்பாகும்.

புதிய வருடத்தின் அபிவிருத்தி இலக்குகள் மற்றும் திட்டங்களை வருடத்தின் ஆரம்பத்திலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

அந்தவகையில், கடந்த வருடம் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாது மீளவும் திறைசேரிக்கு அனுப்பப்பட்டிருக்குமானால் அது குறித்து அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும்” ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg