Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனக் கடற்பரப்பில் விபத்து: 32 பேர் மாயம்

In
Updated: 08:22 GMT, Jan 7, 2018 | Published: 08:22 GMT, Jan 7, 2018 |
0 Comments
1354
This post was written by : Suganthini

சீனாவுக்கு அப்பாலான கடற்பரப்பில் எண்ணெய்த் தாங்கியொன்றுடன், சரக்குக் கப்பலொன்று மோதியதைத் தொடர்ந்து, 32 பேர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ள நிலையில், மீட்புப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, சீன நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பனாமா நாட்டுப் பதிவுடைய ஸாஞ்சி  எண்ணெய்த்தாங்கிக் கப்பலும், ஹொங்கொங் நாட்டுப் பதிவுடைய சி.ஃஎப் கிறிஸ்ரல் சரக்குக் கப்பலும், சீனாவில் ஸாங்காய் மாகாணத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தைத் தொடர்ந்து, மேற்படி எண்ணெய்த் தாங்கி தீப்பிடித்துள்ளது.

கப்பல் மாலுமிகளே காணாமல் போயுள்ளதாகவும், காணாமல் போனவர்களில் 30 ஈரானியர்களும் 2 பங்களாதேஷியர்களும் அடங்குவதாகவும், சீனாவின் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சரக்குக் கப்பலிலிருந்த 21 மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவ்வமைச்சுக் கூறியுள்ளது.

மீட்புப் பணி நடவடிக்கையில் சீனாவுக்குச் சொந்தமான 8 கப்பல்களும் தென்கொரியாவுக்குச் சொந்தமான கப்பலொன்றும் ஹெலிகொப்டரொன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எண்ணெய்த்தாங்கிக் கப்பல், ஈரானிலிருந்து ஒரு லட்சத்து 36 ஆயிரம் தொன் எண்ணையைத் சுமந்துகொண்டு வந்த அதேவேளை, சரக்குக் கப்பல் சுமார் 64 ஆயிரம் தொன் தானியங்களை அமெரிக்காவிலிருந்து சுமந்துகொண்டு சீனாவுக்கு வந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg