Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிட்னியில் கடுமையான வெப்பம்: மக்கள் அவதி

In
Updated: 03:56 GMT, Jan 8, 2018 | Published: 03:56 GMT, Jan 8, 2018 |
0 Comments
1263
This post was written by : Suganthini

கடந்த 79 வருடங்களின் பின்னர் இம்முறை, அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் கடுமையான வெப்பநிலை நிலவி வருவதால், அங்குள்ள மக்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

மேற்கு சிட்னியின் பென்ரிட் (Penrit) பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டதாகவும், 47.3 செல்சியஸ் பாகை வெப்பநிலை நிலவியதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான வெப்பநிலை காரணமாக, சிட்னியில் காட்டுத்தீ பரவுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடுமையான வெப்பத்தைத் தாங்கமுடியாத மக்கள், கடலிலும் நீச்சல் தடாகங்களிலும் நீராடி வருகின்றனர்.

கடந்த 1939ஆம் ஆண்டு சிட்னியில் 47.8 செல்சியஸ் பாகை வெப்பநிலை காணப்பட்டது. இதனையடுத்து, 79 வருடங்களின் பின்னர் இம்முறை கடுமையான வெப்பநிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg