Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல்போன மலேசிய விமானத்தைத் தேடும் பணி மீண்டும் ஆரம்பம்!

In
Published: 07:09 GMT, Jan 8, 2018 |
0 Comments
1165
This post was written by : Suganthini

கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம், மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து, சீனாவின் பீஜிங் நோக்கி புறப்பட்ட எம்.எச்.370 எனும் இலக்கமுடைய விமானம் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் திடீரெனக் காணாமல் போயிருந்தது. இந்த விமானம் காணாமல் போயிருந்த வேளையில், அவ்விமானத்தில் 239 பேர் இருந்துள்ளனர்.

இந்த விமானத்தைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோதும், இதுவரையில் அவ்விமானம் தொடர்பாகவோ, அவ்விமானத்தில் பயணித்தவர்கள் தொடர்பாகவோ எதுவித தகவலும் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், இவ்விமானத்தைத் தேடும் நடவடிக்கை கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரியுடன் கைவிடப்பட்டது.

இதற்கிடையில், இந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாமென்று சில ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டிருந்த அதேவேளை, கிழக்கு ஆபிரிக்கக் கரையோரத்திலும் இந்திய சமுத்திரத்திலும் விமானங்களின் சில பாகங்கள் மீட்கப்பட்டிருந்தன.  இருப்பினும், இந்த விமானப் பாகங்கள் காணாமல் மலேசிய விமானப் பாகங்களா என்பது தொடர்பாக சரியாக  ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், இவ்விமானத்தைத் தேடும் நடவடிக்கையை அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமொன்று ஆரம்பிக்கவுள்ளதாகவும், இன்று (திங்கட்கிழமை) அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)