Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிதிச்சேவை ஒப்பந்தம் இல்லையாயின் கடுமையான பிரெக்சிற்

In
Updated: 12:18 GMT, Jan 8, 2018 | Published: 12:17 GMT, Jan 8, 2018 |
0 Comments
1177
This post was written by : Suganthini

நிதிச்சேவை ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவில்லையென்றால், பிரித்தானியா கடுமையான பிரெக்சிற்றை எதிர்நோக்க நேரிடுமென, பிரித்தானிய சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் நைஜல் ஃபராஜ் (Nigel Farage)  தெரிவித்துள்ளார்.

பிரஸ்ஸல்ஸில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இன்று (திங்கட்கிழமை) கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின்போது, நிதிச்சேவை ஒப்பந்தத்தை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் இணங்கவில்லையென்றால், பிரித்தானியா கடுமையான பிரெக்சிற்றை எதிர்நோக்க நேரிடும்’ என்றார்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான பிரெக்சிற் பேச்சாளர் மைக்கேல் பார்னியரை, நைஜர் ஃபராஜ் இன்று சந்திக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg