Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்த செய்யவேண்டியவை!

In
Updated: 07:16 GMT, Jan 9, 2018 | Published: 07:07 GMT, Jan 9, 2018 |
0 Comments
1388
This post was written by : Surenth

எம்மில் பலருக்கு இரத்தக் கொதிப்பு ஏற்படுவதற்கு பாரம்பரியமும் ஒரு காரணம். அதிகமான மன அழுத்தத்திற்கு உள்ளாகுபவர்கள், தாக்குதல்களுக்கு உட்படுபவர்கள், பதட்டத்திற்கு உள்ளாகின்றவர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இரத்த கொதிப்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டால், இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஹைபர் டென்ஷன் என்ற  இந்த நோய், மேலும் பல நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. மாரடைப்பு, வாதம் போன்றவை ஏற்படுவதற்கான அறிகுறியாக இந்த உயர் இரத்த அழுத்தம் இருக்கின்றது. ஆகவே இரத்த அழுத்தத்தை சரியான விகிதத்தில் வைத்துக்கொள்வதற்கு சீரான உணவு கட்டுப்பாடும் மருந்துகளும் அவசியம்.

இன்றைய உணவுகளில் பல, இந்த நோயை அதிகரிக்க செய்யும் வாய்ப்புகள் இருப்பதால் இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் கட்டாயமாக சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக, குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மீன், இறால் போன்றவை நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் இருக்க, சோடியம் அதிகமாக சேர்க்கப்படுகிறது. இதனால் இவற்றின் சுவை கூடுகிறது. தயாரிக்கும் நேரமும் குறைகிறது.

ஆனால் பதப்படுத்தப்பட்ட மற்றும் குளிரூட்டப்பட்ட உணவுகள், இரத்த அழுத்தத்தை அதிகரிக்கின்றது. ஆகவே, தினமும் புதிய காய்கறிகள் மற்றும் பொருட்களை சந்தைக்குச் சென்று வாங்கி பயன்படுத்துவது நல்லது.

இன்றைய சந்தைகளில், நிறைய இனிப்பு உணவுகள் கிடைக்கின்றன. அதில் சேர்க்கப்பட்டுள்ள இனிப்பு, இயற்கை இனிப்பாகவும் இருக்கலாம் அல்லது செயற்கை இனிப்பாகவும் இருக்கலாம். அதிக அளவு இனிப்பு உட்கொள்ளல் எடை அதிகரிப்புக்கு வழி வகுக்கும்.

மேலும், இவற்றில் கலோரிகள் அளவும் அதிகம். நீரிழிவு நோயாளிகளாக இருக்கும் பட்சத்தில், இத்தகைய பழக்கம் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும்.

ஆகவே, நேரடியாக உணவில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்கலாம். அல்லது சொக்லேட், பாண், பதப்படுத்தப்பட்ட பழச்சாறு போன்றவற்றை உண்ணுவதை தவிர்க்கலாம். சர்க்கரைக்கு மாற்றாக இருக்கும் உணவுகளை அறிந்து அவற்றை உட்கொள்ளலாம். ஆனால் எது எப்படி இருந்தாலும், இனிப்பு உணவுகள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

நம்மில் பலரும் குளிர்ப்பானங்களுக்கு அடிமையாகவே இருக்கிறோம். அதன் சுவை மற்றும் தாகத்தை தணிக்கும் தன்மை, அவற்றிற்கான தேடலை அதிகரிக்கிறது. தொடர்ந்தும் குளிர்பானங்கள் பருகுவதால் எடை அதிகரிக்கின்றது. மேலும் உயர் இரத்த அழுத்தம் உண்டாகிறது. ஆகவே, குளிர்பானங்களை குறைத்து புதிதாக பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் பழச்சாறுகளை இனிப்பு சேர்க்காமல் அருந்தலாம். இதனால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg