Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்தளமலை விவகாரத்தில் கைதானவர்களின் விடுதலை வேண்டி வழிபாடு

In இலங்கை
Published: 10:32 GMT, Jan 9, 2018 |
0 Comments
1119
icon_com
This post was written by : Varshini

மத்தளமலை குன்றத்தூர் முருகன் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டவர்களின் விடுதலைக்காக, விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றுள்ளது.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மத்தளமலை குன்றத்தூர் முருகன் ஆலயத்தை, நீதிமன்ற உத்தரவை மீறி நிர்மாணிக்க முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆலய பரிபாலனசபை தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் கனரக வாகனத்தின் சாரதி ஆகிய நால்வரும் கைதுசெய்யப்பட்டு, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்களை விரைவில் விடுவிக்க வேண்டுமென பிரார்த்தித்து, நேற்று (திங்கட்கிழமை) விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.

மத்தளமலையில் பௌத்த சின்னங்களும் தொல்பொருட்களும் உள்ளதென தெரிவித்து அங்கு நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கு மூதூர் நீதவான் நீதிமன்றில் சம்பூர் பொலிஸார் தடை உத்தரவைப் பெற்றுள்ளனர். அதன் பின்னர், அப்பகுதியில் ஆலய நிர்மாணப் பணிகளை முன்னெடுத்ததாக குறிப்பிட்டே மேற்படி நால்வரும் கைதுசெய்யப்பட்டனர்.

எனினும், நீதிமன்ற தடை உத்தரவை பெற்றுக்கொண்டமை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லையென குன்றத்தூர் முருகன் ஆலய பரிபாலன சபையினரும் அப்பகுதி மக்களும் தெரிவிக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)