Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்க பயிற்சியாளரின் திட்டம் கைகூடுமா?

In கிாிக்கட்
Updated: 08:00 GMT, Jan 10, 2018 | Published: 08:00 GMT, Jan 10, 2018 |
0 Comments
1246
This post was written by : Anojkiyan

4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறக்குவதே தனது திட்டம் என தென்னாபிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் குறித்த அடுத்த கட்ட நகர்வு குறித்து, ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“வேகப்பந்து வீச்சாளர்களை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற மனநிலையுடன் செயல்படக்கூடிய பயிற்சியாளர் நான். 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் போது அணியின் கலவை சரியாக இருக்கிறதா? என்பதை முதலில் பார்க்க வேண்டும். எதிர்வரும் டெஸ்ட் போட்டிக்கான சீதோஷ்ண நிலையும் 4 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்த வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

அது கைகூடாவிட்டால் வேறு வழியை கையாள வேண்டும். எதுவாகிலும் இந்த தொடர் முழுவதும் எப்படி 4 வேகப்பந்து வீச்சாளர்களை களத்திற்கு கொண்டு வருவது என்பதை தான் கவனத்தில் கொள்வோம்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg