Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிலிப்பைன்ஸில் மத நிகழ்வு: ஒருவர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 11:38 GMT, Jan 10, 2018 | Published: 11:38 GMT, Jan 10, 2018 |
0 Comments
1195
This post was written by : Suganthini

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற கத்தோலிக்க  மத நிகழ்வொன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 800 பேர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் கத்தோலிக்க மதத்தினரின் வருடாந்தத் திருவிழா நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. காலையில் ஆரம்பமாகிய இத்திருவிழா சுமார் 22 மணித்தியாலங்களாக நடைபெற்றது.

இந்தத் திருவிழாவில் 3.5 மில்லியன்கணக்கான மக்கள் ஒன்றுகூடியிருந்த நிலையில், ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி முன்னாள் சிறைச்சாலை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், சுமார் 800 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg