Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தாண்டின் திட்டங்கள் குறித்து ஆராய தெற்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் சந்திப்பு

In ஐரோப்பா
Updated: 09:43 GMT, Jan 11, 2018 | Published: 09:43 GMT, Jan 11, 2018 |
0 Comments
1093
This post was written by : Risha

2018ஆம் ஆண்டிற்கான முதலீடுகள், வளர்ச்சி மற்றும் குடியேற்றவாசிகள் ஆகிய விடயங்கள் குறித்து கலந்தாலோசிக்கும் வகையில் தெற்கு ஐரோப்பிய ஒன்றிய மாநிலங்களின் தலைவர்கள் கூடியுள்ளனர்.

குறித்த தலைவர்களுடனான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) ரோமில் இடம்பெற்றது.

சந்திப்பில் கலந்துக் கொள்வதற்காக பிரான்ஸ், கிரேக்கம், ஸ்பெயின், மால்டோ, சைப்ரஸ் மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.

கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக வருகைத்தந்த தலைவர்களுக்கு இத்தாலிய பிரதமர் போலோ ஜென்டிலோனி வரவேற்பளித்துள்ளார்.

இந்த விஜயத்தின் ஒரு அங்கமாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன், இத்தாலி ஜனாதிபதி மற்றும் பிரதமரை தனிப்பட்ட முறையில் இன்று சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg