Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரான் மீது புதிய தடைகள் விதிக்கப்படும்?- திறைசேரி செயலாளர்

In
Published: 03:45 GMT, Jan 12, 2018 |
0 Comments
1092
icon_com
This post was written by : Risha

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது புதிய தடைகளை விதிப்பார் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்டீவ் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் செய்தி அறையில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஈரான் மீது மேலும் புதிய தடைகளை அமெரிக்கா அமுல்படுத்தும் என நான் எதிர்பார்க்கிறேன்.

2015ஆம் ஆண்டு அணுசக்தி உடன்படிக்கையின் ஒரு அங்கமாக ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்க ட்ரம்பிற்கு வெள்ளிக்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தடைகளை விதிப்பதற்கு சாதகமான தீர்மானத்தை ட்ரம்ப் எடுக்கும் பட்சத்தில், ஈரான் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் மக்களை இலக்கு வைக்கும் வகையிலான புதிய தடைகளை ட்ரம்ப் நிர்வாகம் அமுல்படுத்தும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)