Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்பாத பெற்றோருக்கு எச்சரிக்கை!

In இலங்கை
Updated: 08:52 GMT, Jan 12, 2018 | Published: 08:52 GMT, Jan 12, 2018 |
0 Comments
1152
This post was written by : Ravivarman

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பாடசாலைகளுக்கு செல்லாத மற்றும் ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட மாணவர்களது பெற்றோர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்ற நீதிவான் ஏ,ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்தே குறித்த சிறுவர்களின் பெற்றோர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,’கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஊரியான், கோரக்கன்கட்டு, பிரமந்தனாறு, புன்னைநீராவி ஆகிய பகுதிகளில் பாடசாலைகளுக்குச் செல்லாத 11 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது 08 சிறுவர்களது பெற்றோர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு குறித்த சிறுவர்கள் விடுவிக்கப்பட்டதுடன், மூன்று சிறுவர்களை அச்சுவேலியிலுள்ள சான்று பெற்ற பாடசாலையில் வைத்து தொழில் பயிற்சிகளை வழங்குமாறும் நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைகளுக்குச் செல்லாத மற்றும் பாடசாலைகளை விட்டு இடைவிலகிய மற்றும் ஒழுங்கற்ற வரவுகளைக்கொண்ட சிறுவர்களை மீளப்பாடாசலைகளில் இணைத்துக்கொள்ளுதல் மற்றும் தொழில்சார் கற்கை நெறிகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்திற்கு அமைவாக நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் இவ்வாறு மீளக்கற்றலில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg