Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிதம்பரம் வீட்டில் அமுலாக்கத்துறையினர் சோதனை!

In இந்தியா
Updated: 09:19 GMT, Jan 13, 2018 | Published: 05:49 GMT, Jan 13, 2018 |
0 Comments
1153
This post was written by : Arul Jesu

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் அமுலாக்கத்துறை அதிகாரிகள்   இன்று (சனிக்கிழமை) சோதனை நடத்திவருகின்றனர்.

இன்று காலை 7.30 மணிமுதல் நடைபெற்றுவரும் இந்த சோதனை நடவடிக்கையில் ஆறு அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

சோதனை நடைபெறும் வீட்டில் ப.சிதம்பரம் இல்லை எனவும், அவரது மனைவி நளினி சிதம்பரம் மற்றும் அவரது மருமகள் ஆகியோர் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேபோல், சென்னை மற்றும் டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டிலும், காரைக்குடியிலுள்ள ப.சிதம்பரம் வீட்டிலும் அமுலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் இந்த சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg