Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மஹிந்தவுடன் கைகோர்ப்பு – வலுவடையும் முன்னாள் மன்னன்

In இலங்கை
Published: 07:30 GMT, Jan 14, 2018 |
0 Comments
1282
This post was written by : Puvanes
herath001

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் அங்கத்துவம் வகித்து வந்த இரு முக்கியஸ்தர்கள் அக்கட்சியில் இருந்து பிரிந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணிப்பக்கம் இணைந்து கொண்டுள்ளனர்.

சம்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத் மற்றும் சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர ஆகியோரே நேற்று (சனிக்கிழமை) கேகாலையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்தின் போது மஹிந்தவின் பக்கம் இணைந்துள்ளனர்.

குறித்த கூட்டத்தின்போது கருத்து தெரிவித்த ஹேரத் “தற்போதைய அரசாங்கம் போன்ற முறைகேடான அரசாங்கம் வரலாற்றில் காணப்படவே இல்லை, இந்த அரசாங்கத்தை உடனடியாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும், மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, ஏற்கனவே சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மஹிந்த தரப்போடு இணைந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்தநிலையில் அது தற்போது அரங்கேறியுள்ளமை மஹிந்தவிற்கு ஆதரவு அதிகரிப்பதை சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் மஹிந்தவுடன் தற்போது இணைந்திருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் அற்ற சிலர் மைத்திரியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)