Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா நொச்சிமோட்டையில் வாகன விபத்து – இருவர் படுகாயம்

In இலங்கை
Updated: 06:14 GMT, Jan 20, 2018 | Published: 06:14 GMT, Jan 20, 2018 |
0 Comments
1050
This post was written by : Risha

வவுனியா நொச்சிமோட்டையில் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டியுடன் கனரக வாகனம் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வவுனியா நோக்கி சென்ற கனரக வாகனம் முன்னால் பயணித்துக் கொண்டிருந்த சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் நேற்று குறித்து விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில், துவிச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலத்த காயத்திற்குள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கருகில் இடம்பெற்ற இவ்விபத்தில் கனரக வாகன சாரதி வீதியில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையை பொருட்படுத்தாமல் வாகனத்தை செலுத்தியமையே இவ்விபத்திற்கு காரணமென பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்து.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg