Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொரியாக்களுக்கிடையிலான பேச்சுக்கு ஒலிம்பிக்போட்டி வழிவகுக்கும்: பான் கீ மூன்

In உலகம்
Updated: 06:31 GMT, Feb 10, 2018 | Published: 06:31 GMT, Feb 10, 2018 |
0 Comments
1114
This post was written by : Suganthini

தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்குமிடையில் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடைபெற குளிர்கால ஒலிம்பிக்போட்டி வழிவகுக்குமென்று தான் நம்புவதாக, ஐ.நா. சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நெறிமுறை ஆணையகத்தின் தலைவராகப் பதவி வகிக்கும் பான் கீ மூன், தென்கொரியாவில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இன்று (சனிக்கிழமை) கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்போட்டி தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்குமிடையில், மீண்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்  வகையில், அர்த்தமுள்ளதும் உண்மையானதுமான கலந்துரையாடல் நடைபெற  வழிவகுக்குமென்று நான் எண்ணுகின்றேன்’ என்றார்.

‘இரு கொரியாக்களுக்கிடையிலான கலந்துரையாடல், கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைக்க வழிவகுக்குமென்பதுடன், இதன் மூலம் கொரிய தீபகற்பத்தில் மறுமலர்ச்சியை அடைவதற்கான பேச்சுவார்த்தையை நோக்கி நாம் செல்ல முடியும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ‘கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றம் தொடர்பாக, கொரிய மக்கள் மாத்திரமின்றி உலகளாவிய ரீதியிலுள்ள மக்களும் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த ஒலிம்பிக்போட்டி, சமாதானச் சூழ்நிலையில் நடைபெறுவதையிட்டு, நான் மகிழ்ச்சியடைகின்றேன்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, இரு கொரியாக்களுக்கிடையிலும் மீண்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பொறுப்பு அனைத்து நாடுகளுக்கு உண்டெனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg