Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரசாயன ஆயுதங்கள் வைத்திருப்பதான குற்றச்சாட்டை சிரியா மறுப்பு

In உலகம்
Updated: 05:27 GMT, Mar 11, 2018 | Published: 05:27 GMT, Mar 11, 2018 |
0 Comments
1217
This post was written by : Suganthini

ரசாயன ஆயுதங்கள் வைத்திருப்பதாக தம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டைத்  முற்றாக மறுப்பதாக, சிரிய வெளிவிவகார அமைச்சர் ஃபைஸால் மெக்டாட் (Faisal Mekdad) தெரிவித்துள்ளார்.

டமஸ்கஸில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ரசாயன ஆயுதங்களை நாம் வைத்திருப்பதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றாக மறுக்கின்றோம். குளோரின் வாயு உட்பட எம்மிடம் எந்தவித ரசாயன ஆயுதங்களும் இல்லை’ என்றார்.

சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதலின்போது, ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தம்மீதான குற்றச்சாட்டை சிரிய அரசாங்கம் மறுத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg