Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வலைத்தொகுதிகள் அகற்றப்பட்டதால் மீனவர்கள் பாதிப்பு

In இலங்கை
Updated: 12:18 GMT, Mar 13, 2018 | Published: 11:08 GMT, Mar 13, 2018 |
0 Comments
1112
This post was written by : poovannan

விடத்தல் தீவு மீனவர்களின் வலைத்தொகுதிகள், மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளரின் உத்தரவிற்கு அமைய கடலில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தோட்டவெளி – ஜோசப்வாஸ் நகர் மீனவர்களின் வலைத் தொகுதிகள் முன்னறிவித்தலின்றி கடலில் இருந்து அகற்றப்பட்டமையால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் அவர்க்ள இவ்வாறு தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் கூறுகையில், “சுமார் 173 மீனவர்கள் விடத்தல் தீவிற்கு அண்மித்த கடற்பகுதியில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக சிறகு வலைத் தொழிலை மேற்கொண்டு வருகின்றோம்.

கடந்த 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடற்தொழில் திணைக்களம் கடலில் எல்லைக் கட்டைகளை இட்ட பின்னர், ஜோசப் வாஸ் நகர் மீனவர்களுக்கும் பாப்பாமோட்டை கிராம மீனவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் வலுவடைந்தன.

இந்நிலையில் பாப்பாமோட்டை மீனவர்கள், எமது பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகளை சேதப்படுத்தியிருந்தனர். குறித்த பிரச்சினை தொடர்பாக, கடற்தொழில் திணைக்களம், மன்னார் பிரதேச செயலகம், மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் உள்ளிட்ட பலருக்கு கடிதங்களை அனுப்பி வைத்தோம்.

இந்த நிலையிலேயே எமது மீன்பிடி உபகரணங்கள் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி கடற்பகுதியிலிருந்து முற்றாக அகற்றப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg