Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா

In இலங்கை
Updated: 03:40 GMT, Mar 14, 2018 | Published: 03:31 GMT, Mar 14, 2018 |
0 Comments
1408
This post was written by : poovannan

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, வவுனியா கலைமகள் சனசமூக நிலையமும் கலைமகள் விளையாட்டுக்கழகமும் இணைந்து தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழாவை நடத்தவுள்ளது.

வட. மாகாண அணிகள் மட்டும் பங்குபற்றக்கூடிய அணிக்கு 4 பேர் கொண்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, வவுனியா மாவட்ட வீரர்கள் மட்டும் பங்குபற்றக்கூடிய 40 மைல் சைக்கிள் ஒட்டப்போட்டி, வவுனியா மாவட்ட வீரர்கள் மட்டும் பங்குபற்றக்கூடிய 5 மைல் மரதன் ஒட்டப்போட்டி மற்றும் வவுனியா மாவட்ட வீரர்கள் மட்டும் பங்குபற்றக்கூடிய கயிறு இழுத்தல்.

மேலும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களான சறுக்கு மரம் ஏறுதல், தலையணை சண்டை, முட்டி உடைத்தல், சங்கீத கதிரை, மூன்று சில்லு சைக்கிள் ஒட்டம் போன்ற விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும்.

மேலும் பிரபல இன்னிசைக்கலைஞர்களின் ‘இன்னிசை இரவு’ நிகழ்ச்சியும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விளையாட்டுக்களுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு, ‘தலைவர், கலைமகள் சனசமூக நிலையம், மன்னார் வீதி, வவுனியா’ என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg