Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உரிமைகளை மீறும் அரசாங்கத்தின் முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும்: ஜே.வி.பி

In இலங்கை
Updated: 09:07 GMT, Mar 14, 2018 | Published: 09:07 GMT, Mar 14, 2018 |
0 Comments
1148
This post was written by : Risha

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால், ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட மனுவிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பதற்ற காலத்தில் நடைமுறைபடுத்தப்பட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை, நிலைமை சுமூகமடைந்தும் நீக்கப்படாது தொடர்கிறது. இது பொதுமக்களை பாரிய நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.

மேலும், தடையை நீடிப்பதன் மூலம் தகவல்களை அறிந்துக்கொள்ளல் மற்றும் கருத்துக்களை வெளியிடுதல் போன்ற உரிமைகளை பறிக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

எனவே, விரைந்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அரசாங்கத்தின் தடுப்பிலுள்ள சமூக வலைத்தளங்களை விடுவிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg