Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஷமியின் போட்டி நிர்ணய புகார் குறித்து BCCI விசாரணை

In கிாிக்கட்
Updated: 11:04 GMT, Mar 18, 2018 | Published: 10:16 GMT, Mar 18, 2018 |
0 Comments
1125
This post was written by : Velauthapillai Kapilan

தன் மீதான குற்றச்சாட்டுக்கள் யாவும் ஆதாரமற்றவை என்றும், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் குற்றஞ்சுமத்தப்பட்டு வருவதாகவும் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொஹம்மட் ஷமி குறிப்பிட்டுள்ளார்.

ஷமி மீது சுமத்தப்பட்டுள்ள ஆட்ட நிர்ணய (Match Fixing) முறைப்பாடு குறித்து பி.சி.சி.ஐ. (BCCI) விசாரணை நடத்தி வருகின்றது.  இந்நிலையில், தனக்கெதிரான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள ஷமி, பி.சி.சி.ஐ. உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின் போது தனது கணவன்  சூதாட்டத்தில் ஈடுபட்டடதாகவும், பாகிஸ்தான் பெண்ணொருவரிடமிருந்து பணம் பெற்றதாகவும்   ஷமியின் மனைவியான ஹாசின் ஜஹான் குற்றஞ்சாட்டியுள்ளார். இவை குறித்து, பி.சி.சி.ஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகின்றது.

இந்நிலையில், தான் ஆட்ட நிர்ணயத்தில்  ஈடுபடவில்லை என்றும், எதிர்காலத்திலும் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடபோவதில்லை என்றும் இது தனது நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் சதித்திட்டம் என்றும் ஷமி கூறியுள்ளார்.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனி, மொஹம்மட் ஷமி தாய்நாட்டிற்கும் அவர் மனைவிற்கும் துரோகம் செய்யக்கூடியவர் அல்லர் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg