Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோஹ்லியின் துடுப்பாட்ட மட்டையை கொண்டு சாதிப்பாரா இங்கிலாந்து வீராங்கனை?

In கிாிக்கட்
Updated: 06:07 GMT, Mar 19, 2018 | Published: 06:07 GMT, Mar 19, 2018 |
0 Comments
1165
This post was written by : Velauthapillai Kapilan

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தனக்கு பரிசாக கொடுத்த துடுப்பு மட்டையை இனிவரும் போட்டிகளில் பயன்படுத்தப் போவதாக இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனையான டேனியல் வயட்  தெரிவித்துள்ளார்.

இந்தமாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா, அவுஸ்ரேலிய, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் இந்தியப் பெண்கள் அணிக்கு எதிராக விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ள டேனியல் வயட் , இந்தத் தொடருக்காக தன்னிடம் ரகசிய ஆயுதமொன்று உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்ரேலியாவுக்கு எதிராக தான் விளையாடிய போட்டியின்போது சதமடித்த சந்தர்ப்பத்தில் தனது துடுப்பாட்ட மட்டை உடைந்ததாகவும், அதனால்  தனக்கு கோஹ்லி பரிசாகக் கொடுத்த துடுப்பாட்ட மட்டையை பயன்படுத்தப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு அவுஸ்ரேலியா அணிக்கு எதிராக விளையாடப்போகும் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவதையே விரும்புவதாகவும்  டேனியல் வயட்  கூறியுள்ளார்.

கடந்த நவம்பரில் அவுஸ்ரேலியா அணிக்கு எதிரான T-20 போட்டியில் 56 பந்துகளில் டேனியல் வயட் சதம் விளாசினார். T-20 போட்டியில் முதல் சதம் அடித்த இங்கிலாந்து வீராங்கனையும் இவரென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg