Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் 60 மில்லி மீற்றர் வரையான மழைவீழ்ச்சி

In இலங்கை
Updated: 05:14 GMT, Mar 21, 2018 | Published: 03:44 GMT, Mar 21, 2018 |
0 Comments
1080
This post was written by : poovannan

கிளிநொச்சியில் 60 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி அண்மையில் பதிவாகியிருக்கின்றது என பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நிலவும் காலநிலை தொடர்பில் கருத்துக் கூறுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சி காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் இடையிடையே மழை பொழிந்துள்ளது.

மேலும், இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 16 அடி 3 அங்குலமாகக் காணப்படுகின்றது. குளங்களின் நீர்மட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg