Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

32 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு ஏற்பட்ட நிலை! – சாதனைக்கு ஒரு பந்து

In கிாிக்கட்
Updated: 08:37 GMT, Mar 21, 2018 | Published: 08:37 GMT, Mar 21, 2018 |
0 Comments
1851
This post was written by : Puvanes

வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பதற்கு அசாத்தியமான நம்பிக்கை தேவை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் ஜாவித் மியாண்டட் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்த சுதந்திரக்கிண்ணத் தொடரில் கடைசி பந்தில் 6 ஓட்டங்களை அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்த தினேஷ் கார்த்திக் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கார்த்திக் சிஸ்சர் அடித்ததை நான் பார்க்கவில்லை செய்திகள் ஊடாகவே அதனை அறிந்து கொண்டேன், இவ்வாறான நிலை ஏற்படுவது பந்து வீச்சாளர்களுக்கு பரிதாபம் என்றே கூற வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், தினேஷ் கார்த்திக்கு எனது வாழ்த்துக்கள் எனவும் கூறியுள்ளார்.

கொழும்பு மைதானத்தில் பவுண்டரி எல்லை எந்தளவிற்கு தூரம் என்பது பற்றி எனக்கு தெரியாது ஆனால் முன்னர் சிஸ்சர் அடிப்பது மிகக் கடினம் எனக் குறிப்பிட்ட ஜாவித் மியாண்டட், தற்போதைய ரி20 போட்டிகள் காரணமாக அதிரடியாக ஆட வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது, அதனால் சிக்ஸர் அடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று கடைசி பந்தில் சிஸ்சர் அடித்து பாகிஸ்தானை வெற்றி பெற வைத்த போது ரசிகர்கள் என்னைப் பாராட்டியது இன்றும் நினைவில் இருக்கின்றது எனவும் ஜாவித் மியாண்டட் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜாவித் மியாண்டட் 1986ஆம் ஆண்டு சார்ஜாவில் நடந்த இந்தியாவிற்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து பாகிஸ்தானை வெற்றி பெற வைத்த முக்கிய வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg