Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உடுப்பிட்டியில் திருடியவர்கள் சாவகச்சேரி நுணாவில் கைது!

In இலங்கை
Updated: 12:27 GMT, Mar 22, 2018 | Published: 12:27 GMT, Mar 22, 2018 |
0 Comments
1051
This post was written by : Anojkiyan

உடுப்பிட்டியில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்கள், சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம், வவுனியா மற்றும் ஊர்காவற்துறையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி இமையானன் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (புதன்கிழமை) திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது நான்கு திருடர்களும் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டனர். ஆனால் இதன்போது ஒருவர் மட்டுமே பிடிக்கப்பட்டார். ஏனைய மூவர் தப்பியோடியுள்ளனர்

பொதுமக்களால் பிடிக்கப்பட்டவரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையிலும், தப்பியோடியவர்கள் பயன்படுத்திய வாகன இலக்கத்தின் அடிப்படையிலும் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் தப்பியோடியவர்கள் மூவரையும் பொலிஸார் இன்று கைதுசெய்தனர்.

சாவகச்சேரி நூணாவில் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து திருட்டு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய வடி ரக வாகம் ஒன்றும், 12 ஸ்மார்ட் தொலைபேசிகளும், 4சோடி கால் சலங்கைகள், வீட்டில் பணம் சேமிக்கும் உண்டியல்கள் நான்கு, ஒருதொகை கட்டார் நாட்டு பணம் மற்றும் 2 கமராக்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரியில் வைத்து கைது, செய்யப்பட்டவர்கள் வல்லெட்டித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை வல்லெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg