Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரானில் நிலநடுக்கம்: 38 பேர் காயம்

In உலகம்
Updated: 03:00 GMT, Apr 2, 2018 | Published: 03:00 GMT, Apr 2, 2018 |
0 Comments
1138
This post was written by : Suganthini

ஈரானில் 5.3 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில், 38 பேர் காயமடைந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஈரானின் கெர்மன்ஷஹ் (Kermanshah) மாகாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டதுடன்,  நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்களில் பலர் சிறிய காயங்களுக்குள்ளாகியதாகவும், இவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், கடந்த 2017ஆம் ஆண்டு நொவம்பரில் ஈரானில் ஏற்பட்ட 7.3 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 600 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 8 ஆயிரம் பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg