Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் மோட்டார் குண்டுகள் கண்டெடுப்பு!

In இலங்கை
Updated: 06:28 GMT, Apr 16, 2018 | Published: 04:39 GMT, Apr 16, 2018 |
0 Comments
1099
This post was written by : Varatharajan Yuganthini

மன்னார், கள்ளியடிப்பாடு கடற்கரைப் பகுதியில் ஒரு தொகுதி மோட்டார் குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் கண்டெடுத்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பேசாலை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து ஒரு தொகுதி மோட்டார் குண்டுகளை கண்டெடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர் ஒருவர் கொடுத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட தேடுதலில், குறித்த மோட்டார் குண்டுகள் இரும்புப் பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. இதில்,  81 ரக மோட்டார் குண்டுகள் 15 மற்றும் 61 ரக மோட்டார் குண்டு ஒன்றும் காணப்பட்டுள்ளன.

கண்டெடுக்கப்பட்ட குண்டுகள் பேசாலை பொலிஸ் பகுதிக்குட்பட்ட காட்டுப் பகுதியில் செயலிழக்கச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் பேசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)