Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட கிம் சங்கின் பிறந்ததினம்

In உலகம்
Updated: 06:35 GMT, Apr 16, 2018 | Published: 06:35 GMT, Apr 16, 2018 |
0 Comments
1090
This post was written by : Suganthini

வடகொரியாவின் மறைந்த தலைவர் கிம்  Il  சங்கின் 106ஆவது பிறந்ததின நிகழ்வு, மிகச் சிறப்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டது.

இவரது பிறந்ததினத்தையொட்டி, தலைநகர் பியோங்கியாங்கிலுள்ள Taedong நதிக்கரையில் சுமார் 20 நிமிடங்கள்வரை வானவேடிக்கைச் சாகாசங்கள் நிகழ்த்தப்பட்டதுடன், மறைந்த தலைவர் கிம் சங்கின் பேரனும் வடகொரிய ஜனாதிபதியுமான கிம் ஜொங் உன், மக்களுடன் சேர்ந்து பிறந்ததின நிகழ்வைக் கண்டுகளித்துள்ளதாக, அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் பிரதமராக கிம் சங் 1948ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டுவரையும், ஜனாதிபதியாக 1972ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டுவரையும் பதவி வகித்திருந்தார்.   1912ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி பிறந்த கிம் சங், 1994ஆம் ஆண்டு ஜுலை 8ஆம் திகதி காலமானார்.

இவரது பிறந்ததினத்தன்று வடகொரியாவில் பொது விடுமுறைத் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இவரது பிறந்ததினத்தையொட்டி, வடகொரியாவில் கலை நிகழ்வொன்று அண்மையில் இடம்பெற்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)