Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் ரஷ்யா

In உலகம்
Updated: 04:24 GMT, Apr 17, 2018 | Published: 04:24 GMT, Apr 17, 2018 |
0 Comments
1108
This post was written by : Risha

ரஷ்யாவிற்கு எதிராக முக்கியமாக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பொருளாதார தடைகளுக்கு எதிரான சட்டமூலத்தை நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள ரஷ்ய நாடாளுமன்ற கீழவை தீர்மானித்துள்ளது.

அதன்படி, குறித்த சட்டமூலம்; எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி முதலாம் வாசிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் பிற நாடுகளினால் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த சட்டமூலம் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு, அது குறித்து விவாதிக்க சிறப்பு அமர்வு நேற்று கூடியது.

அதன்படி, குறித்த சட்டமூலம் குறித்து நிபுணர்களுடன் கலந்துரையாட வேண்டியதன் அவசியம் எடுத்துரைக்கப்பட்டு எதிர்வரும் மே மாதம் விவாதிக்கப்படவுள்ளது.

அமெரிக்காவினால் கடந்த 6ஆம் திகதி அறிவிக்கப்பட்ட புதிய பொருளாதார தடைகளுக்கு எதிராகவே இந்த சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளது.

இதன்படி, அமெரிக்காவிலிருந்து விவசாய பொருட்கள், புகையிலை மற்றும் மதுபானப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதேவேளை, ரஷ்யாவுடனான அணுவாயுத, ரொக்கெட் மற்றும் விமான தொழிற்துறைகளின் ஒத்துழைப்பிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg