Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளவரசர் ஹரியின் திருமண ஒப்புதல்: 15இல் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

In
Updated: 06:10 GMT, May 13, 2018 | Published: 06:10 GMT, May 13, 2018 |
0 Comments
1105
This post was written by : Suganthini

வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் மறைந்த வேல்ஸ் இளவரசி டயானாவின் இளைய புதல்வரான இளவரசர் ஹரியின் திருமணத்துக்கான ஒப்புதலை, எதிர்வரும் 15ஆம் திகதி பிரித்தானியாவின் இரண்டாம் எலிஸபெத் மகாராணி வழங்கவுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இளவரசர் ஹரியும் அமெரிக்காவைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகையான மேகன் மாக்கிலும் திருமணம் செய்துகொள்ள ஒப்புதலளிக்கும் மகாராணியின் எழுத்துபூர்வமான ஒப்புதல் ஆவணத்தின் புகைப்படத்தை பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டது.

பிரித்தானிய முடிக்குரிய அரியாணையின் ஆறாவது வாரிசானான இளவரசர் ஹரி திருமண பந்தத்தில் இணையும் நிலையில், பிரித்தானிய அரச குடும்ப பாரம்பரியத்தின்படி, பிரித்தானியாவின் இரண்டாம் எலிஸபெத் மகாராணியான அவரது பாட்டியிடமிருந்து, தனது திருமணத்துக்கான ஒப்புதலை ஹரி பெற வேண்டுனெவும், அவ்வாறு அவர் ஒப்புதல் பெறத் தவறும் பட்சத்தில், பிரித்தானிய முடிக்குரிய அரியாணையின் ஆறாவது வாரிசாக இருக்க ஹரி தகுதியற்றவராகி விடுவாரெனவும் தெரியவருகின்றது.

இந்நிலையில், இளவரசர் ஹரி –மேகன் மாக்கிலின் திருமணத்துக்கான ஒப்புதலளிக்கும் ஆவணத்தில் கடந்த மார்ச்சில் மகாராணி கையொப்பமிட்டதுடன், எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக, அந்த ஊடகம் மேலும் கூறியுள்ளது.

இளவரசர் ஹரிக்கும் மேகன் மாக்கிலுக்கும் எதிர்வரும் சனிக்கிழமை வின்ஸ்டர் கோட்டையிலுள்ள சென். ஜோர்ஜ் தேவாலயத்தில் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பிரித்தானிய அரச குடும்பத்தின் மிகப் பிரமாண்டமான திருமண வைபவமான இளவரசர் ஹரி -மேகன் மாக்கிலின் திருமணத்துக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், திருமணத்துக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மிக, மிக மும்முரமாக அரச குடும்பத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 2011ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த இளவரசர் ஹரியின் மூத்த சகோதரரான இளவரசர் வில்லியம் -கேட் மிடில்ட்டனின் திருமண வைபவத்தை சுமார் இரண்டு பில்லியன் கணக்கான மக்கள் கண்டுகளித்த நிலையில், இவர்களின் திருமணமும் உலகினரின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்புக் காணப்படுவதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

மண வாழ்க்கையில் இணையும் இவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவதற்கான அந்நன்நாளை எதிர்பார்த்து அரச குடும்ப ரசிகர்கள் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)