Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்கு மீண்டும் உதவும் ஆசிய அபிவிருத்தி வங்கி

In வணிகம்
Updated: 10:23 GMT, May 14, 2018 | Published: 10:20 GMT, May 14, 2018 |
0 Comments
1026
This post was written by : Jeyachandran Vithushan

ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான மேலும் ஒரு ஒப்பந்தம் கடந்த 11 ஆம் (வெள்ளிக்கிழமை) திகதி கைச்சாத்திடப்பட்டுள்ளது.

10 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த கடன் உதவி ஒப்பந்தம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை பிரதிநிதி சிறிவிடோவிற்றிக்கும், திறைசேரியின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்கவிற்கும் இடையே இடம்பெற்றது.

இவ்வாறு வழங்கப்படும் 10 கோடி அமெரிக்க டொலர் கடனில், 3 கோடி அமெரிக்க டொலர்களை உதவு தொகையாக வழங்க ஜப்பானிய நிதியம் முன்வந்துள்ளது. குறித்த தொகை வறுமை ஒழிப்பு செயற்பாடுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அண்மையில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் 51வது வருட கூட்டத்தில் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகள் வழங்க தயார் என வங்கியின் தலைவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)