Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பா.ஜ.க.வின் ஆட்சி நேர்மையானது: தமிழக துணை முதல்வர்

In இந்தியா
Updated: 09:17 GMT, May 15, 2018 | Published: 09:17 GMT, May 15, 2018 |
0 Comments
1144
This post was written by : Kemasiya

பா.ஜ.க.வின் ஆட்சி நேர்மையானது என தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளிவந்ததை தொடர்ந்து, துணை முதல்வர் அனுப்பி வைத்துள்ள வாழ்த்து செய்தியில் மேற்படி தெரிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க.விற்கு தமிழக அரசு சார்பிலான வாழ்த்து செய்தியை, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவிடம் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த வாழ்த்து கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,

“இந்த வெற்றக்களிப்பான சந்தர்ப்பத்தில் எனது வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் துல்லியமான நேர்மையான ஆட்சிக்கு கிடைத்த வெற்றியே இது.

இதுவரை இந்தியாவில் 14 மாநிலங்களை ஆட்சி செய்து வந்த பா.ஜ.க, தற்போது கர்நாடகாவுடன் சேர்த்து 15ஆவது மாநிலத்தையும் கைப்பற்றியுள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைகிறோம். தமிழகம் சார்பில் வாழ்த்துக்கள்” எனக் கூறி குறித்த வாழ்த்தினை அனுப்பி வைத்துள்ளார்.

இதேவேளை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் தெரிவிக்கையில்,

“கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திரு. எடியூரப்பா அவர்களுக்கு வாழ்த்துகள்.  புதிதாக பொறுப்பேற்கும் பா.ஜ.க அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்” இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)