Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குளிர்பானம் கொடுத்து திருட்டு: மட்டக்களப்பில் சம்பவம்

In இலங்கை
Updated: 07:34 GMT, May 17, 2018 | Published: 07:09 GMT, May 17, 2018 |
0 Comments
1129
This post was written by : Yuganthini

மட்டக்களப்பு பகுதியில் நீண்டகாலமாக நூதன முறையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவந்த நிலையில் பொலிஸாரிடம் சிக்கிய சந்தேகநபர்கள் இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

குளிர்பானத்தில்  மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து, மிக நீண்டகாலமாக இவர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவந்த நிலையில் நேற்று மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் மட்டக்களப்பு, ஊறணிப் பகுதியில் இடம்பெற்ற திருட்டு தொடர்பாக முறைபாடு செய்யப்பட்டிருந்த நிலையில்,  இவ்விடயம் தொடர்பாக மட்டு. பொலிஸார் நடத்திய விசாரணைகளின் பயனாக குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன.

 இதே பாணியில் இதற்கு முன்னர் திருட்டு சம்பவங்களுடன் குறித்த சந்தேகநபர்களுக்கு தொடர்பிருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தொியவந்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)