Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களே தன்னுடைய வழிகாட்டிகள் என்கிறார் கமல்ஹாசன்

In இந்தியா
Updated: 09:15 GMT, May 17, 2018 | Published: 09:15 GMT, May 17, 2018 |
0 Comments
1112
This post was written by : Litharsan

மக்களை அறிந்துகொள்ள மேற்கொண்டுள்ள தனது பயணம் முக்கியமானது எனக்குறிப்பிட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், மக்களே தன்னுடைய வழிகாட்டிகள் எனத் தெரிவித்துள்ளார்.

இன்று காலை (வியாழக்கிழமை) நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தொண்டர்கள் மற்றும் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது பணகுடி பேருந்து நிலையத்தில் மக்களைச் சந்தித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “உங்களை நான் அறிந்து கொள்ள மேற்கொண்டுள்ள பயணம் இது. ‘மக்கள் நீதி மய்யம்’ முக்கியமான பாதையில் செல்கிறது. அதற்கு வழிகாட்டி நீங்கள்தான். உங்கள் ஆசி இல்லாமல் இந்தப் பயணத்தைத் தொடர முடியாது. உங்கள் தேவைகளை தெரிந்து கொள்வதற்கான புனித பயணம் இதுவாகும்” எனத் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டப் பயணத்தைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தூத்துக்குடி மாவட்டப் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு காயல்பட்டணம், ஆறுமுகன் ஏரி, புன்னக்காயல், ஏரல் மற்றும் பண்டாரவிளை ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)