Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கண்ணீரைக் காணிக்கையாக்கி உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவோம்: அங்கஜன்

In இலங்கை
Updated: 04:55 GMT, May 18, 2018 | Published: 04:55 GMT, May 18, 2018 |
0 Comments
1061
This post was written by : Ravivarman

மே 18 ஆம் திகதி உயிரிழந்த ஆத்மாக்களுக்கு கண்ணீரை காணிக்கையாக்கி உயிரிழந்த உறவுகளின் ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுநாளை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘தமிழ் மக்கள் போராட்ட குணமும், கூடவே உணர்வுகளையும் வெளிப்படுத்துபவர்களாக, ஒருமித்த உணர்வோடு உணர்வுகளுக்கு மதிப்பளித்து நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்கவேண்டும்.

உரிமைக்காக பிரதிநிதித்துவம் பெற்றுக்கொண்டவர்கள் மீது, உறவுகளின் உணர்வலைகள் மீது தான் சார்ந்த நலன் வெளிப்பாடுகளை தூய ஆத்மாக்களின் அஞ்சலி நிகழ்வில் வெளிப்படுத்த இடமளிக்க முடியாது என்பதே அனைத்து தரப்பினருடைய எண்ணமும் விருப்பமுமாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக உணர்வுபூர்வமான முறையில் ஒன்று சேரும் அஞ்சலி நிகழ்வில் இதுவரை காலமும் எந்த விதமான செயலூக்கமும் இல்லாமல் தமது நலன்களுக்காக வலுவிழந்த செயற்பாடுகள் ஊடாக எவரும் அரசியல் சாயங்களை பூச முயல வேண்டாம்.

சிந்திய குருதி மண்ணோடு கலந்து உருக்களை மட்டுமல்ல மனங்களையும் சிதைத்து ஆறாத மனதோடு ஊசலாடும் வாழ்க்கையை வாழும் மக்கள் மீது சித்திரங்களை மீண்டும் வரையலாம் என கனவு காணாதீர்கள்.

இத்தலைமுறையினரான நாம் வெளிப்படுத்துவது உணர்வு பூர்வமான போராட்ட வெளிப்படுத்தல்களே. எனவும் உறங்கும் நம் உறவுகளுக்காக கண்ணீரை காணிக்கையாக்கி உறவுகளின் ஆத்ம சாந்திக்காகவும் எமது ஆத்ம திருப்திக்காகவும் செயற்படுவோம்’ என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)