Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈராக் பிரதமருடன் சதர் சந்திப்பு: கூட்டணிக்கான சமிக்ஞை

In உலகம்
Updated: 09:40 GMT, May 20, 2018 | Published: 09:40 GMT, May 20, 2018 |
0 Comments
1063
This post was written by : Risha

ஈராக் நாடாளுமன்ற தேர்தலில், வெற்றிபெற்ற முன்னாள் ஷியா ராணுவத் தலைவர் மோக்டடா சதர், ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதியை சந்தித்துள்ளார்.

தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்ட 24 மணித்தியாலங்களுக்குள் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பானது, கூட்டணி அமைப்பதற்கான தெளிவான அறிகுறியாக விளங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈராக்கில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் ஷியா இராணுவத் தலைவர் மோக்டடா சதர் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

மோக்டடா சதரின், சேய்ரோன் கூட்டணி 54 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றதுடன், தற்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாதியின் கட்சி 42 இடங்களைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

அமெரிக்காவின் நீண்ட கால எதிரியான மோக்டடா சதர், தேர்தலில் போட்டியிடாததால் பிரதமராக முடியாது. ஆனால், புதிய அரசை அமைப்பதில் முக்கிய பங்கை வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg