Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசாங்கத்தின் இலக்கு என்ன? – வெளிப்படுத்தினார் மலிக்

In இலங்கை
Updated: 11:42 GMT, May 23, 2018 | Published: 11:42 GMT, May 23, 2018 |
0 Comments
1083
This post was written by : Varshini

இவ்வருடத்திற்குள் 2.7 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நேரடி முதலீட்டை பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் இலக்கு என சர்வதேச முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகள் இவ்வருடத்தில் குறைவடைந்துள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டினர். இதனை மறுத்த அமைச்சர் மலிக், மேற்குறித்த விடயத்தைக் குறிப்பிட்டார். அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”கடந்த 2017ஆம் ஆண்டு 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நேரடி முதலீட்டை அரசாங்கம் பெற்றது. இவ்வருடத்தில் அதனை 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துக் கொள்வதே அரசாங்கத்தின் இலக்காகும்.

பல முதலீட்டுத் திட்டங்களை ஏற்கனவே முதலீட்டு வாரியம் அங்கீகரித்துள்ளது. அரசாங்கத்தின் இலக்கை அடைந்துகொள்ள இது உதவியாக அமையும்.

திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சீமெந்து தொழிற்சாலைகளும் இந்த முதலீட்டுத் திட்டங்களுக்குள் உள்ளடங்கும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg